இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமனம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் நவம்பர் 8ம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா தொடருக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

நவம்பர் 8 ஆம் தேதி டர்பனில் முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நவம்பர் மாத தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகள் முறையே நவம்பர் 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் க்கெபர்ஹா, செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான கூடுதல் பயிற்சியாளர்களாக சைராஜ் பஹுதுலே, ஹிருஷிகேஷ் கனிட்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவிஎஸ் லட்சுமண் கடந்த 2021 முதல் பெங்களூருவில் NCAன் தலைவராக பணியாற்றி வருகிறார். டிராவிட் இருந்த சமயத்திலும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

லக்ஷ்மன் கடந்த ஜூன் 2022ல் அயர்லாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். கடைசியாக ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பயிற்சியாளராக இருந்தார். இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20ஐ தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இலங்கை தொடரில் இருந்து இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்டி இந்த தொடரிலும் கேப்டனாக தொடர்கிறார். மேலும் இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 டி20 தொடர்களையும் வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 வித்தியாசத்தில் வென்றுள்ளது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இந்நிலையில் தென்னாபிரிக்கா தொடரையும் வெல்ல ஆர்வமாக உள்ளார். இந்திய அணி கடைசியாக டிசம்பர் 2023ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. டிசம்பர் 14 அன்று ஜோபர்க்கில் நடந்த டி20 போட்டியில், இந்தியாவுக்காக சூர்யகுமார் யாதவ் சதம் அடித்தார், மேலும் குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 NEWS 

Squads for India’s tour of South Africa & Border-Gavaskar Trophy announced #TeamIndia | #SAvIND | #AUSvIND pic.twitter.com/Z4eTXlH3u0

— BCCI (@BCCI) October 25, 2024

தென்னாபிரிக்கா தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (C), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.