சென்னை சுமார் 14 மாதங்களுக்கு பிறகு கடற்கரை – வேளசேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. […]