Prakash Raj: 'சில காயம் சதையை விட ஆழமானது' – மகன் மற்றும் கௌரி லங்கேஷ் இழப்பு குறித்து பிரகாஷ் ராஜ்

தென்னிந்திய மொழிகள் உட்படப் பல மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடம் என நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். ‘மதவாத அரசியலில் பா.ஜ.க ஈடுபடுவதாக’ தொடர்ச்சியாக பிரகாஷ் ராஜ் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “சில காயங்கள் சதையை விட ஆழமானவை” எனத் தனது 5 வயது மகன் இழப்பு குறித்து பிரகாஷ் ராஜ் வேதனை பகிர்ந்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

தனியார் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், “வலி மிகவும் பெர்சனலானது. என்னுடைய தோழி கௌரி லங்கேஷும், என் மகன் சித்தார்த்தும் எனது வலி. இருப்பினும் என்னால் சுயநலமாக இருக்க முடியாது. எனக்கு மகள்கள் இருக்கின்றனர். எனக்கென்று குடும்பம் இருக்கிறது, தொழில் இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள்.

சில காயங்கள்

ஒரு மனிதனாக எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கும் நான் பொறுப்பு. அதனால், வலியை விட எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில், அது தனிப்பட்ட வலியைக் குறைக்கிறது. அதேசமயம், நான் அதை மறைக்க விரும்பவில்லை. சில காயங்கள் சதையை விட ஆழமானவை. அதனுடன் நீங்கள் வாழ வேண்டும். நான் ஒரு மனிதன். அது என்னைத் தொந்தரவு செய்கிறது, காயப்படுத்துகிறது. ஆனாலும், வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். மரணம் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது” என்று கூறினார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் 1994-ல் கன்னட நடிகை லலிதா குமாரியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, மேகனா, பூஜா என்ற இரு மகள்களும், சித்தார்த் என்ற மகனும் பிறந்தனர். இதில், சித்தார்த் 2004-ல் தனது 5 வயதில் உயிரிழந்தார். பின்னர், 2009-ல் லலிதா குமாரியைப் பிரிந்த பிரகாஷ் ராஜ், 2010-ல் நடன இயக்குநர் போனி வர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 2015-ல் வேதாந்த் என்ற மகன் பிறந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.