2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 8.30 மணி அளவில் ஆரம்பமானது.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நவம்பர் மாதம் (1) மற்றும் (04)ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும் அன்றைய தினங்களில் வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பு நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.