`கங்குவா’ திரைப்படத்தின் எடிட்டர் நிசாத் யூசுப் மரணமடைந்திருக்கிறார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் அவரின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இவர் மரணத்திற்கான காரணத்தையும் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற கங்குவா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வந்திருந்தார் நிசாத். `கங்குவா’ திரைப்படம் மட்டுமல்ல இதற்கு முன்பு `சாவேர்’, `தல்லுமாலா’ போன்ற திரைப்படங்களையும் எடிட் செய்தது இவர்தான். `தல்லுமாலா’ திரைப்படத்திற்காக கேரளா அரசின் மாநில விருதையும் பெற்றார் நிசாத் யூசுப்.
இவரின் மறைவிற்கு திரைதுறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ” நிசாத் நம்முடன் இல்லை என்பதை அறிந்து மனமுடைந்துப் போனேன். கங்குவா திரைப்படத்தின் முக்கியமான நபராக என்றும் எங்களின் நினைவில் இருப்பீர்கள். நிசாத்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் இரங்கல் பதிவிட்டிருக்கிறார் சூர்யா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…