Nayanthara Behind the Fairytale: பர்சனல் பக்கங்களை பகிரும் நயன்; திருமண டாக்குமென்டரி ரிலீஸ்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவரது திருமண நிகழ்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் டாக்குமென்டரியாக வெளியிடப்போவதாக முன்னரே அறிவித்திருந்த நிலையில், அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

இந்த டாக்குமென்டரிக்கு “Nayanthara : Behind The Fairy Tale” அதாவது, “நயன்தாரா: விசித்திரக் கதையின் பின்னால்” என்று பெயரிடப்பட்டிருந்தது.

இது வெறும் திருமண வீடியோ டாக்குமென்டரியாக இல்லாமல் நயன்தாராவின் சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறும் படமாக உருவாகியிருக்கிறது.

ஜூன் 9, 2022ல் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக் கான் முதல் ரஜினிகாந்த் வரை பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போதே, திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் திருமணம் குறித்து சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த டாக்குமென்டரியின் டீசர் யூடியூபில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Behind the Fairy Tale-ல் அவர், இத்தனை பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பயணத்துடன், அவரது தனிப்பட்ட போராட்டங்கள், வெற்றி தோல்விகள், காதல் வாழ்க்கை ஆகியவற்றைக் குறித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஆவணப்படம் 1 மணிநேரம் 21 நிமிடங்கள் நீளமானது. இதை நவம்பர்,18 ம் தேதி நயனின் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.