புதுடெல்லி: டெல்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான். இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாகவும் ரூ.100 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது. மேலும் அவரை கடந்த செப்.2-ம் தேதி கைது செய்தது.
இந்நிலையில் அவருக்கு எதிராக அமலாக்கத் துறை நேற்று 110 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் அம
லாக்கத் துறையால் கைது செய்யப்படாத மரியம் சித்திக் என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் அமான துல்லா கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிபதி விஷால் காக்னே நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.