டெல்லி: அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது- அதாவது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகம். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, : நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. […]