இன்று (01) காலை முதல் அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பமானதுடன் தமது வாக்குகளை அரசாங்க உத்தியோகத்தர்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் (30) தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானதுடன், மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது வாக்குகளை தபால் மூலம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இன்றும் (01) எதிர் வரும் 04ஆம் திகதி திங்கட்கிழமையும் முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தபால் மூலமான தமது வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
நவம்பர் 07, 08 ஆம் திகதி இந்த நாட்களில் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க முடியும்.
இதற்காக 759,210 தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதுடன், அதில் 738,050 விண்ணப்பங்கள் தபால் மூல வாக்களிப்பிற்குத் தகுதி பெற்றுள்ளன.
அவற்றில் கம்பஹாவில் 54,622, மட்டக்களப்பில் 14,003, மாத்தறையில் 33,191, பொலன்னறுவையில் 20,616, இரத்தினபுரியில் 32,450, கண்டியில் 57,951, அனுராதபுரத்தில் 56,438, முல்லைத்தீவு 3,947 ஆகியனவும் உள்ளடங்கும்.
அத்துடன் 21,160 தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டத்துடன் , ஜனாதிபதித் தேர்தலை விட 25, 731 பேர் தபால் மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.