கரூர்: தீபாவளி மாமூல் கேட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெள்ளப்பட்டி பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. நச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் பங்கில் இன்பரசு என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மற்றும் மூன்று இளைஞர்கள் பங்கிற்கு வந்து அவரிடம் தீபாவளி ஃபோனஸ் கேட்டு மிரட்டி பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘பணம் தரவில்லை என்றால், பங்க் இருக்காது’ என்று மிரட்டியதாக தெரிகிறது.

அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சின்னச்சாமி மற்றும் அவரோடு வந்த மூன்று பேர் பங்க் ஊழியரான இன்பரசுவை கீழே தள்ளி காலால் மீதித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

தாக்கும் காட்சி

இதில், காயமடைந்த அவர் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பங்க் ஊழியரை சின்னசாமி மற்றும் மூன்று பேர் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளரான கண்ணன் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி இனாம் கேட்டு பங்க் ஊழியரை நான்கு இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.