மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையில் இருந்த ரத்தக் கரையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் கடசராய் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கடசராய் பகுதியை அடுத்த லால்பூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலத் தகராறில் தந்தை மற்றும் மூன்று மகன்கள் […]