”ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடைய ஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப்பார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்யவே முடியாது என்றிருந்த காலம் இப்போது இல்லை. எப்படி மார்பகங்களின் அளவை பெரிதாக்குகிறோமோ அதே போல ஆணுறுப்பின் அளவையும் பெரிதாக்கலாம்’’ என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ் அது பற்றி விளக்கினார்.
’’ஹார்மோன் பிரச்னை காரணமாக ஆணுறுப்பு சிறியதாக இருந்தால், ஹார்மோன் தெரபி கொடுப்பதன் மூலமே இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும்.
ஹார்மோன் பிரச்னை இல்லையென்றால், அவரவர் வயிற்றுப் பகுதியில் இருக்கிற கொழுப்பு திசுக்களை எடுத்து, அதை உடைத்து நானோ கொழுப்பாக அல்லது மைக்ரோ ஃபேட்டாக மாற்றுவோம். அதிலிருந்து ஸ்டெம் செல்களை தயாரித்து, ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் ஊசி மூலம் செலுத்தினால் ஆணுறுப்பு பெரிதாகும். இந்த சிகிச்சை செய்த பிறகு, ஆணுறுப்பு இயல்பாக இருக்கும்போதே பெரிதாக மாறி இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஆணுறுப்பில் 100 கிராம் நானோ ஃபேட் செலுத்துகிறோம் என்றால், அந்த அளவுக்கு ஆணுறுப்பு பெரிதாக தெரியும்.
சிலர் வெளிநாடுகளில் ஆணுறுப்பைப் பெரிதாக்கும் சிகிச்சைகளை செய்துகொண்டு வருவார்கள். சில கெமிக்கல்களை ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் செலுத்தி இருப்பார்கள். நம் சருமத்தால் உறிஞ்ச முடியாத எண்ணெயைகூட செலுத்தி விடுவார்கள். இதனால், ஆணுறுப்பு பெரிதாக தெரியும். ஆனால், அது இயல்பாக இல்லாமல் ஒரு கட்டி போல இருக்கும். அது சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடமாக இருக்கும். முறைப்படி ஸ்டெம்செல் சிகிச்சை செய்துகொண்டால், இந்த சங்கடங்கள் இல்லாமல் ஆணுறுப்பும் பெரிதாகும். எந்த பக்க விளைவுகளும் வராது’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.