இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட சிறப்பு எக்ஸ்ப்ளோரர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த எக்ஸ்ப்ளோரர் எடிசனில் மிக நேர்த்தியான நிறம் கொடுக்கப்பட்டு அதில் சூப்பரான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக டேஷ் கேமரா பாதுகாப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஃபுட்வேல் பகுதியில் லைட்டிங் செய்யப்பட்டு இன்டீரியரில் ஒளிரும் வகையிலான சில் பிளேட்ஸ் மற்றும் ஹூடின் மேற்பகுதியில் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. […]