செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான். இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை […]