சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,

சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் இந்து பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது மக்கள் வழிபடுவார்கள். பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான சாத் பூஜை இன்று நஹாய்-காய் சடங்குடன் தொடங்கியது.

இந்நிலையில், சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” சாத் என்ற மாபெரும் திருவிழாவில் இன்று நஹாய்-காயின் புனித நிகழ்வில் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விரதம் இருக்கும் அனைவருக்கும் எனது சிறப்பு வணக்கங்கள். சாத்தி மையாவின் ஆசிர்வாதத்துடன் உங்கள் சடங்குகள் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.