சென்னை: ரூ.52 லட்சம் மோசடி செய்த மருத்துவமனை கேஷியர்; சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி, இவரின் மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள். அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் சௌமியா, கேஷியராக பணிக்குச் சேர்ந்தார்.

மருத்துவர்கள் மைதிலி, பாலாஜி ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்ற சௌமியாவிடம் மருத்துவமனையின் வரவு செலவு கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 13.5.2024 அன்று மருத்துவர் மைதிலியைச் சந்தித்த சில நோயாளிகள், சௌமியா மீது புகாரளித்தார்கள். அதனால் சந்தேகமடைந்த மைதிலி, மருத்துவமனையின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்தார். அப்போது 2022ஆம் ஆண்டு முதல் நோயாளிகளிடம் சிகிச்சைக்கான பெறப்படும் பணத்தை கேஷியர் சௌமியா, தன்னுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

மோசடி வழக்கில் கைதான சௌமியா

இதையடுத்து சௌமியா மீது நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவர் மைதிலி, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் ஆதாரங்களுடன் புகாரளித்தார். அதன்பேரில் ஆணையர் சங்கரின் உத்தரவின்பேரில் இந்த புகாரை மத்திய குற்றப் பிரிவில் உள்ள ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் சௌமியா, ரூ. 52,24,035 வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சௌமியாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 24 வயதாகும் சௌமியா, மோசடி செய்த பணத்தை எப்படிச் செலவழித்தார் என்று மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.