குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசின் உதவியுடன் 1,996 வீடுகள்..

மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1,996 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சீன அரசு இணங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த 1,996 வீடுகளும், மூன்று கட்டங்களாக பல இடங்களில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொரட்டுவயில் 575 , கொட்டாவயில் 108, தெமட்டகொடயில் 586, மஹரகமவில் 112 மற்றும் பேலியகொடயில் 615  வீடுகள் என்ற அடிப்படையில்  நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்த்தித் திட்டத்திற்காக நாட்டிற்கு எவ்வித செலவும் ஏற்படாது என்பதுடன் நிலம் மாத்திரமே வழங்க  வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.