‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி இன்று (நவம்பர் 7) இப்படத்தின் ‘3டி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘கங்குவா’ திரைப்படம் குறித்து நெருப்பாகப் பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா. இதுகுறித்து பேசியிருக்கும் சூர்யா, “அப்போ ‘சந்திரலேகா’, ‘ஒளவையார்’, ‘கர்ணன்’ போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்தாங்க, இப்போ ராஜமெளலி சார் ‘பகுபலி’ எடுத்தாங்க. நானும், சிவாவும் சேர்ந்து ‘ஏன் தமிழில் இன்னொரு ஒரு மிகப்பெரிய திரைப்படம் எடுக்கக் கூடாது. ஒரு நல்ல பிரமாண்ட திரை அனுபவம் கொண்ட திரைப்படத்தை இப்போ எடுக்கவில்லைனா, அப்புறம் எப்போ?’ என்று நினைத்து எடுத்த திரைப்படம்தான் ‘கங்குவா’.
இந்தப் படத்துக்காக எல்லோரும் சேர்ந்து மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்கிறோம். உணர்ச்சிகரமான, வரலாறு பேசும், மிகை யதார்த்தத் திரைப்படம் இது. ஐந்து ஐலாண்டில் இப்படத்தின் கதை நடக்கிறது.
‘கங்குவா’ கதாபாத்திரம் வெளியேயும் ஒரு பெரியப் போருக்காகத் தயாராக இருப்பவன். அதேபோல மனதிலும் அவனுக்குள் ஒரு பெரியப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்தப் படம் மன்னிப்பைப் பற்றி ரொம்ப உயர்வாக பேசும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது பற்றி பேசும். இதுவரை திரைப்படங்களில் வராத பல விஷயங்களைப் பற்றி இப்படம் ரொம்ப அழுத்தமாகப் பேசும். ஆக்ஷன் – எமோஷன் இரண்டுமே ரொம்ப அழுத்தமாக இருக்கும்.
இன்னைக்கு இருக்கிற இந்த சூர்யாவ நீங்க எல்லாரும்தான் உருவாக்கி இருக்கீங்க. பொறுப்புடன் உங்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ரொம்ப தாழ்மையாக, அடக்கமாக, பணிவாகச் சொல்றேன், ‘இந்திய சினிமா இந்தப் படத்தை வாயைப் பொளந்து பார்க்கும்’. ‘கங்குவா’ வரும் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த நாள் எல்லோருக்கும் ‘ரெட்டை தீபாவளியாக, நெருப்பு மாதிரி இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…