Kanguva : `சூர்யா சார் 4 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு, 6 மணிக்கு ஷூட்டுக்கு ரெடியாகிடுவார்'- சிவா

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி இன்று (நவம்பர் 7) இப்படத்தின் ‘3டி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்தும் சூர்யா குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “‘கங்குவா’ திரைப்படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போதே இது மிகப்பெரிய திரைப்படம் என்று தெரிந்துவிட்டது. இந்த மிகப்பெரிய திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா என்பதுதான் எனக்கிருந்த பெரிய சவாலாக இருந்தது. ‘உன்னால்’ முடியும் சிவா என்று என் மீது எல்லோரும் நம்பிக்கை வைத்தனர். படக்குழுவினர் எல்லோரும் சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அவர்களின் அந்த நம்பிக்கையில் உருவனதுதான் இந்தப் படம்.

கங்குவா

நான் எங்கு போனாலும் சூர்யா சார் ரசிகர்கள் என்கிட்ட கேட்கிற ஒரே விஷயம், ‘சார் எங்க அண்ணனுக்கு ஒரு மாஸான, நல்ல படம் கொடுங்க சார்’னுதான் கேட்பாங்க. அவங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்லிக்கிறேன் ‘உங்க அண்ணன், எங்க சூர்யா சாருக்கு இது மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும்’. ரசிகர்களோட அளவற்ற அன்புக்கு 100 % தகுதியான மனிதர் சூர்யா சார். இந்த படத்துல 2,3 வருஷமா சூர்யா சார் கூட பயணிச்சிருக்கிறேன். காலையில 4 மணிக்கு எழுந்து, மேக்கப் எல்லாம் போட்டு, 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு ரெடியாக வந்து நிற்பார்.

இதுவரைக்கும் ஒருமுறைகூட ‘இது வேணுமா, இது தேவையா, இத பண்ண முடியுமா’ என்று என்கிட்ட கேட்டதே இல்லை. தண்ணிக்குள்ள இருக்கச் சொன்னேன் இருந்தார், மலை மேல ஏறச் சொன்னேன் ஏறினார். மரத்தில் ஏறச் சொன்னேன் ஏறினார். நான் சொல்வதை தயக்கமின்றி செய்தார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகந்த சவாலுடன் ‘கங்குவா’ கதாபாத்திரத்திற்குத் தயாரானார். ஆகச் சிறந்த அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்திருக்கிறார் சூர்யா சார்.

இயக்குநர் சிவா

ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாடியும் பெரிய எமோஷன் இருக்கு, பெரிய ஆக்‌ஷன் இருக்கு. படக்குழுவினர் ஒவ்வொருத்தரும் இப்படத்தை நம்ம படம் என்று நினைத்து கடுமையாக உழைத்தார்கள். அதுதான் இப்படம் மிகப்பெரிய படமாக உருவாவதற்குக் காரணம்.” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.