IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை… துண்டு போட்ட முக்கிய வீரர்!

India National Cricket Team: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy 2024) நெருங்கி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா (India vs Australia) மோத உள்ள தொடர் என்றாலே அனைவருக்கும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதுவும் தற்போது இந்தியா அதன் சொந்த மண்ணிலேயே 0-3 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆகி கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது. அப்படியிருக்க இந்திய அணி அதன் ஸ்குவாடை அறிவித்துவிட்ட நிலையில், விரைவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு (Team Australia) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வரும் நவ. 22ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வரும் டிச.6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் வரும் டிச.14ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் டிச. 26ஆம் தேதியும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜன.3ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வென்று, ஒன்றில் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (ICC World Test Championship Final 2025) தகுதிபெறும் எனலாம். 

சொதப்பிய இந்திய ஏ அணி

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் அசத்திய இந்திய அணி (Team India), இரு தொடர்களையும் கைப்பற்றியிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில் ஹாட்ரிக் கனவு பலிக்காது என்றே பல வல்லுநர்களும் கணித்து வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த அக்சர் பட்டேல் மட்டும் இதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அதே அணியில் ஓப்பனிங் பேக்அப்பாக அபிமன்யூ ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்துவீச்சு பேக்அப்பிற்கு பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோரும் முக்கிய ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் டிராவலிங் ரிசர்வ்ஸ் ஆக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தற்போது இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு (India A vs Australia A) இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் முதல் போட்டியில் இந்தியா ஏ தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 161 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது, ஆஸ்திரேலியா ஏ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்களை எடுத்திருக்கிறது. இன்னும் 3 நாள்கள் ஆட்டம் பாக்கியிருக்கிறது.

சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை

இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் முக்கிய வீரர்களான அபிமன்யூ ஈஸ்வரன் 0, கேஎல் ராகுல் 4, சாய் சுதர்சன் 0, ருதுராஜ் கெய்க்வாட் 4 என தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். ஆறுதல் அளிக்கும் விதமாக விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரேல் மட்டும் 186 பந்துகளில் 80 ரன்களை அடித்தார். அதாவது இந்திய அணியின் பாதி ஸ்கோரை அவர்தான் இன்று எடுத்துள்ளார். முதல் டெஸ்டில் ரோஹித் சர்மாவிற்கு (Rohit Sharma) மாற்று வீரர்களாக பார்க்கப்படும் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran) மற்றும் கேஎல் ராகுல் (KL Rahul) இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மட்டுமில்லாமல் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் ருதுராஜ், சாய் சுதர்சனும் சொதப்பியது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிவர்களுக்கே முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) இதில் முன்னணியில் இருப்பார் எனலாம். அவர் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை சமாளித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை விளையாடும் திறனை பெற்றிருக்கிறார் எனலாம். ரோஹித் விளையாடாதபட்சத்தில் ஓப்பனிங் ஸ்பாட்டில் யார் விளையாடுவார் என்பது மேலும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

துண்டு போட்ட துருவ் ஜூரேல்

ஜூரேலை சேர்த்தாலும் அவர் மிடில் ஆர்டரில்தான் விளையாட முடியும். ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் இருவருமே பிளேயிங் லெவனில் விளையாடினாலும் பிரச்னை இருக்காது. துருவ் ஜூரேல், கேஎல் ராகுல் இடத்தில் விளையாடினால் நிச்சயம் சர்ஃபராஸ் கானுக்கு (Sarfaraz Khan) பிளேயிங் லெவனில் வாய்ப்பே இருக்காது. அதுமட்டுமின்றி ஓப்பனிங் ஸ்பாட்டில் அபிமன்யூ வருவாரா மாட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த குழப்பங்களுக்கு வரவிருக்கும் நாள்களில் விடை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் துருவ் ஜூரேல் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியையாவது விளையாடுவார் என்பது மட்டும் உறுதியாகிறது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.