ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 30 தலைவர்களை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 13 மற்றும் 20 தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சீட் வழங்கப்படாததால் பாஜகவைச் சேர்ந்த 30 பேர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட அந்த 30 தலைவர்களை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து நேற்று மகாராஷ்டிராவிலும் 40 தலைவர்களை கட்சியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.