ராஞ்சி: சட்டவிரோதமாக சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது அரசியல் உதவியாளர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கில் சிபிஐ கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 23-ல் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மூன்று மாநிலங்களில் சிபிஐ திடீரென சோதனை நடவடிக்கைகளை தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாகிப்கஞ்சில் உள்ள 11 இடங்கள், ராஞ்சியில் 3 இடங்கள், பாட்னா மற்றும் கொல்கத்தாவில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில், 50 லட்சம் ரொக்கம், ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.