புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாக 9 தொகுதி இடைத்தேர்தல் கருதப்படுகிறது. இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக.வைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களை சந்தித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 36 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் 2027-ல் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அரைஇறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. எனவே, இடைத்தேர்தலில் வென்றால்தான் பாஜக.வால் சட்டப்பேரவை தேர்தலை அச்சமின்றி சந்திக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், முதல்வர் யோகி இடைத்தேர்தலில் வெல்ல அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காகவே ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில், ‘பட்டேங்கேதோ கட்டேங்கே (பிரிந்தால் இழப்பு)’ என இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றபாஜக கோஷம் வெற்றிக்கு அடித்தளமிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் இந்த கோஷத்தை
பாஜக முக்கியமாக முன்வைக்கிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர்: இந்நிலையில், கடந்த அக்டோபர் 22-ம் தேதி மதுராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை முதல்வர் ஆதித்யநாத் சந்தித்தார். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஹரியானாவில் முதல்வர் பதவியேற்பு விழா
வுக்குப் பின்னர் சண்டிகரில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல்வர் ஆதித்யநாத், தனியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
முக்கியமாக நவம்பர் 3-ம் தேதி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். இந்த 4 தலைவர்களுடனான சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் உ.பி. இடைத்தேர்தலில் வெல்வதற்கான வியூகங்கள், ஆலோசனைகளை பெற்று உற்சாகம் அடைந்துள்ளார். அதற்கேற்ப இடைதேர்தலில் பாஜக வெல்ல, ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களை களம் இறக்கி உள்ளது. இடைத்தேர்தலில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவும் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடிக்குநிகரான ஆதரவு, முதல்வர் ஆதித்யநாத்துக்கும் கிடைத்துள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் இருந்து ஆதித்யநாத் தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். ஜார்க்கண்ட் பிரச்சாரக் கூட்டங்களில், ‘‘பட்டேங்கே தோகட்டேங்கே, பட்டியலின, ஓபிசி மற்றும் உயர்குடியினர் அனைவரும் இந்துக்கள் பெயரில் ஒன்றிணைவது அவசியம். இந்துக்களை கடந்த 1947 முதல் காங்கிரஸ் பிரித்து அரசி
யல் செய்கிறது. பாஜகவின் மாபெரும் சாதனையாக அயோத்தியின் ராமர் கோயில் உள்ளது’’ எனப் பேசி வருகிறார் ஆதித்யநாத். இதுபோன்ற பிரச்சாரங்கள் உ.பி. இடைத்தேர்தலில் பலன் அளிக்கும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.