நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு’ என்ற நிகழ்ச்சி வேலூரில் நடைபெற உள்ளது.
முதலீடு என்றால் என்ன? எங்கே, எப்படி முதலீடு செய்வது. முதலீட்டில் நிறைய வழிமுறைகள் உள்ளதே. மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறைய திட்டங்கள் உள்ளதே. எதை தேர்வு செய்யலாம். எது லாபம் தரும், எது நமக்கு ஏற்ற திட்டம்? இப்படி பல கேள்விகளும் அச்சங்களும் நம் முன்னே உள்ளன.
முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வருமானம் (Returns) ஆகும். லாபம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளில்தான் நாம் முதலீடு செய்கிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இலக்கு (Goals) அடிப்படையில் முதலீடு செய்யும் போது அது அதிக பலன்களை தருவதை பார்க்க முடிகிறது.
இலக்கு அடிப்படையில் முதலீடு செய்யும் போது தேவையான தொகுப்பு நிதி (Corpus Fund) சரியாக சேர்ந்துவிடுகிறது.
பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு, பணி ஓய்வுக் காலம் ஆகியவை நம்முடைய முக்கிய நிதி இலக்குகளாக இருக்கிறது.
நம்முடைய முதலீட்டில் லாபகரமான வருமானம், குறிப்பாக பணவீக்க விகிதத்தை (Inflation Rate) விட இரண்டு மடங்கு வருமானம் இருந்தால்தான் சரியானதாகும்.
இதற்காக வழிகாட்டும் விதமாக நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, ‘இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!’ என்ற நிகழ்ச்சியை வேலூரில் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிதி நிபுணர், சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார்.
மேலும், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் சங்கரன் வழிகாட்டுகிறார்.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்ய வேலூருக்கு வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு செய்யுங்கள்: https://bit.ly/miraeassetMF
இந்த நிகழ்ச்சி நடைபெறும் விவரங்கள்:
இடம்: வேலூர்.
நாள்: 2024 -நவம்பர் 16, சனிக் கிழமை மாலை 6.30 pm – 8.30 pm