வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க விளக்கமளித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டுக்கள் இரண்டு முறையில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் .ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
வாக்காளர் ஒரு விருப்பு வாக்கை தெரிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாயின் தமக்கு விருப்பமான கட்சி அல்லது சுயேட்ச்சைக் குழுவின் முன்னாள் புள்ளடி (X) இட்டு, அதற்கு கீழே காணப்படும் விருப்பு வாக்கை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள பெட்டியில், விருப்பு வாக்கு 01 எனின் ஒரு புள்ளடி, ஒரு இலக்கணத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே வாக்காளர் இரண்டு விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாயின், தமக்கு விருப்பமான கட்சி அல்லது சுயேட்ச்சைக் குழுவின் முன்னாள் புள்ளடி (X) இட்டு, அதன் கீழ் காணப்படும் விருப்பு வாக்களிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள பெட்டியில் இரண்டு விருப்பு வாக்குகள் அதாவது இரண்டு (X) புள்ளடிகள் (02) இலக்கங்களில் இட வேண்டும்.
மேலும் ஆகக் கூடுதலாக வாக்காளர்களுக்கு மூன்று விருப்பு வாக்குகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்த தலைவர், தமக்கு விருப்பமான கட்சி அல்லது சுயேட்ச்சைக் குழுவின் முன்னாள் புள்ளடி இட்டு,
அதன் கீழ் காணப்படும் விருப்பு வாக்கு வழங்கும் பெட்டியில் 3 இலக்கங்களில் மூன்று விருப்பத் தெரிவுகளுக்கான அதாவது மூன்று புள்ளடிகள் (X) குறிக்கப்பட வேண்டும் என தெளிவுபடுத்தினார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டுகள் இரண்டு வகையில் அச்சிடப்பட்டுள்ளதுடன், மொனராகலை, கேகாலை, பொலன்னறுவை மாவட்டங்களுக்காக ஒரு நிரல் வாக்குச் சீட்டும், ஏனைய 19 தேர்தல் தொகுதிகளுக்காக இரண்டு நிரல் வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க மேலும் விபரித்தார்.