தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமது நியமனத்தை மாற்றுவதற்கு அல்லது இரத்துச்செய்வதற்கு முடியாது என்றும், தேர்தல் பணிகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
ஏனெனில், தேர்தல் கடமைகளுக்காக நியமனம் பெற்றுள்ள சகல அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த தினத்தில், தமக்கு வழங்கப்பட்டுள்ள நிலையத்திற்கு, நியமிக்கப்பட்டுள்ள கடமைகளுக்காக சமூகமளிப்பது கட்டாயம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.