'உத்தர பிரதேசத்தில் இன்று 'லவ் ஜிகாத்' என்பது இல்லை' – யோகி ஆதித்யநாத்

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமராவதியில் உள்ள அச்சல்பூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நாம் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து கிடந்தால், கணபதி பூஜையில் தாக்குதல் நடக்கும், நமது நிலங்கள் பறிக்கப்படும், நமது மகள்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் ‘லவ் ஜிகாத்'(Love Jihad) அல்லது ‘லேண்ட் ஜிகாத்'(Land Jihad) என எதுவும் இல்லை. நமது மகள்களுக்கு யாராவது ஆபத்து ஏற்படுத்தினாலோ, ஏழைகளின் நிலங்களை யாராவது பறித்துக் கொண்டாலோ அவர்களை எமதர்மர் கவனித்துக் கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முன்பு மாபியா கும்பல்கள் இருந்தன. அவர்களை கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர்.”

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.