சென்னை: சென்னையில் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கத்திக்குத்தால் பலத்த காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிண்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பாலாஜியை, நோயாளியைப் பார்க்க வந்த நபர், கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தால் ரத்த காயங்களுடன் தீவிர […]