புத்தாண்டில் மொபைல் போன் வாங்க பிளானா… உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

Smartphone Price Rise: ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் இன்றியமையாத அத்தியாவசிய பொருட்களின் இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது தகவல் தொடர்புக்கான சாதனம் என்ற நிலை மாறிவிட்டது. நமது அன்றாட பணி பலவும் ஸ்மார்ட்போனை சார்ந்தே உள்ளது. மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பலவிதமான அம்சங்கள் பொருந்திய ஸ்மார்ட்போன்களை தினம் தினம் சந்தைகளில் களமிறக்கி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜியும் மிக வேகமாக மாறி வருகிறது. அதனால் போன் வாங்கிய சிறிது காலத்திற்குள்ளாகவே, அதனை மாற்ற நினைக்கும் சூழல் உருவாகி உள்ளது. அந்த வகையில் புத்தாண்டில் புதிய மொபைல் போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு சிறு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருக்கிறது எனலாம்.

கவுண்டர்பாயிண்ச் ரிசர்ச் (Counterpoint Research) என்னும் நிறுவனம் சந்தைக் கண்ணோட்ட அறிக்கையில், ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய சராசரி விற்பனை விலை 2024 ஆண்டில் 3 சதவீதமும், 2025 ஆண்டில் 5 சதவீதமும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மேம்படுத்தப்பட்ட மாடல்கள், சிறந்த கேமரா சென்சார் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஸ்மார்ட்போன்களில் (Smartphones) பயன்படுத்தப்படுவது உட்பட பல காரணங்கள் இருக்கலாம்.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றை ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்த நிறைய நேரமும் பணமும் தேவைப்படுகிறது என்பதே இதற்கு காரணம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் போண்ற சில காரணங்களால், ஸ்மார்ட்போன் விலை 2025ம் ஆண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாலும், பட்ஜெட் பிரிவிலும் நிறுவனங்கள் உங்களுக்காக நல்ல ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தும் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன்களில் மேம்பட்ட மற்றும் நவீன அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த அம்சங்களை மிட்-ரேஞ்ச் போன்களில் ஓரளவுக்கு எதிர்பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் விலை அதிகரிப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்

போன்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட அம்சங்களுக்கான கூறுகளின் விலை அதிகரித்து வருகிறது என்பது முதல் காரணம். விலை உயர்வுக்கு இரண்டாவது காரணம் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். போன்களின் விலை உயர்வுக்கு மூன்றாவது காரணம் ஜெனரேட்டிவ் AI (Generative AI) என கவுண்டர்பாயிண்ச் ரிசர்ச் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 

வாடிக்கையாளர்கள் AI அம்சங்களை அதிகம் விரும்புகின்றனர். இந்த அம்சங்களை வழங்க அதிக சக்திவாய்ந்த செயலி தேவைப்படுகிறது மற்றும் அதிக சக்தி வாய்ந்த செயலி என்றால் அதற்கான விலையும் அதிகரிக்கும் என்பதை மறுக்க இயலாது. நிறுவனங்கள் சக்தி வாய்ந்த செயலிகளை மட்டும் பயன்படுத்தாமல் நல்ல கிராபிக்ஸ், போன்கள் ஜெனரேட்டிவ் AI காரணமாக விலை உயர்ந்து வருவதற்கு இதுவே காரணம்.

ஸ்மார்ட்போன் விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதனால், கிடைக்கும் நன்மைகள் மறுக்க முடியாதவை. AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட கேமரா செயல்திறன் முதல் அதிக அறிவார்ந்த மெய்நிகர் உதவியாளர்கள் வரை புதுமையான அம்சங்களை வழங்குகின்றன. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், எதிர்காலத்தில் இன்னும் சக்திவாய்ந்த மற்றும் அம்சம் நிறைந்த ஸ்மார்ட்போன்களை நாம் எதிர்பார்க்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.