MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!

பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில் நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இருவரும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக தோனி அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தோனி கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஞ்சியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

தோனி அளித்துள்ள புகார் மனுவில், அந்த இருவருடன் 2021ம் ஆண்டே ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அதன் பிறகும் தனது பெயரை பயன்படுத்தி தொடர்ந்து கிரிக்கெட் பள்ளிகளை தொடங்கி உள்ளனர். தனது பெயரை பயன்படுத்தி இருவரும் ரூ. 15 கோடி ஏமாற்றியதாக குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், திவாகர் மற்றும் தாஸ் ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Jharkhand HC Issues Notice To MS Dhoni Over Business Dispute. pic.twitter.com/qlxX8boic5

— RVCJ Media (@RVCJ_FB) November 13, 2024

ஐபிஎல் 2025ல் விளையாடும் தோனி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி கடந்த 5 வருடங்களாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விளையாட உள்ளார். மேலும் ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே இருந்த பழைய விதிமுறை ஒன்றை இந்த ஆண்டு ஏலத்தில் மீண்டும் கொண்டு வந்துள்ளது, அது தோனிக்கும் சாதகமாக அமைந்துள்ளது. இந்த விதியின் படி ஐந்து வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இல்லாத வீரர்களை ஐபிஎல் அணி அன்கேப்ட் வீரராக ரூபாய் 4 கோடிக்கு தக்கவைத்து கொள்ள முடியும். இந்த விதியின் கீழ் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது. தற்போது தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் தோனி சுற்றுலா சென்றுள்ளார். நவம்பர் 22 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதில் தோனி எப்போதும் கால் மூலம் அணி நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பார். ஜனவரிக்குப் பிறகு கிரிக்கெட்டில் தீவிர பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.