தனியார் துறை ஊழியர்கள் தமது வாக்கினைப் பயன்படுத்துவதற்கு சொந்த விடுமுறை மற்றும் சம்பள இழப்பீடின்றி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கவும்..

தனியார் துறை ஊழியர்கள் தமது வாக்கினைப் பயன்படுத்துவதற்கு சொந்த விடுமுறை மற்றும் சம்பள இழப்பீடின்றி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் துறையைச் சேர்ந்த சகல தொழில் தருணர்களுக்கும், நீதி பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவலகங்கள் மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு தங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல உதவும் வகையில் அவர்கள் தொழில் புரியும் இடத்திலிருந்து அவர்களது வாக்களிக்கும் நிலையத்திற்கு இடையில் உள்ள தூரத்தை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் முன்வைக்கப்பட்டதும், மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டதுமான கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையின் பிரகாரம் சம்பளத்துடனான விசேட விடுமுறையை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

private sector leave 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.