தீபாவளி ரிலீஸாக வெளியான `அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பேசபட்டு வந்தது. ஆனால், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. எப்போதும் தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் வெளியாகும்.
தற்போது `அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பட ரிலீஸ் தேதியிலிருந்து 8 வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்ய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக விநியோகஸ்தருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், சிவகார்த்திகேயனுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில்,” அமரன் திரைப்படத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள். தமிழகத்திலும் தமிழகத்துக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் `அமரன்’ திரைப்படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தில் நல்ல கன்டென்ட் இருந்தால் குடும்பங்களின் ஆதரவு நிச்சயமாக கிடைத்துவிடும் என்பதற்கு இந்த திரைப்படம் மீண்டுமொரு உதாரணம்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியை பட ரிலீஸ் தேதியிலிருந்து 8 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி செய்வது இந்த திரையரஙக் வெற்றிக்கு மரியாதை செய்வதாக இருக்கும். படத்தின் இந்த வெற்றியைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறோம். இத்திரைப்படம் இனிவரும் திரைப்படங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அதுமட்டுமல்ல அதன் வியாபாரத்தையும் அதிகப்படுத்தும்.” எனக் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…