Jayam Ravi – Aarti : `சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை' – ஜெயம் ரவி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஆர்த்தி, ஜெயம் ரவி எடுத்த முடிவு என்னுடன் பேசி எடுக்கப்பட்டதல்ல, என்னால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். இந்த விவகாரம் பேசு பொருளானது.

ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு பல காரணங்கள் கற்பிக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் இருவரின் குணாதிசயங்களையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் கருத்துகள் எழுந்தன. இதனை இருவரும் தனித்தனியே கண்டித்தனர்.

இந்த நிலையில் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரிலும் ஆர்த்தி காணொலி மூலமும் ஆஜராகியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியுள்ளது.

2009ம் ஆண்டு ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.