டோலிவுட்டில் களமிறங்குகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
`விருமன்’, `மாவீரன்’ போன்ற ஹிட் படங்கள் மூலம் கோலிவுட்டில் முக்கியமான நடிகையாக உருவெடுத்துவிட்டார் அதிதி ஷங்கர். அவருடைய லைன் அப் படங்களும் தற்போது அதிகமாகியிருக்கிறது. அப்படியானவர் தற்போது டோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்.
நடிகர் பெல்லம்கொண்டா ஶ்ரீனிவாஸ் நடிப்பில் உருவாகி வரும் `பைரவம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிதி ஷங்கர். இந்த தெலுங்கு படத்தில் `வெண்ணிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் அதிதி. இது தொடர்பாக தனது சமூல வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ பைரவம் திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகும் செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் வெண்ணிலாவாக நடித்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கும் அந்த கதாபாத்திரம் பிடிக்குமென நம்புகிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார். இத்திரைப்படம்தான் அதிதி ஷங்கருக்கு நடிகராக டோலிவுட்டில் முதல் திரைப்படம்.
ஆனால், இதற்கு முன்பே பின்னணி பாடகராக டோலிவுட்டில் களம் காண்டிருக்கிறார் அவர். 2022-ல் நடிகர் வருண் தேஜ் நடிப்பில் வெளியான `காணி’ படத்தில் `ரோமியோ ஜுலியட்’ என்ற பாடலை பாடியிருக்கிறார் இவர். இத்திரைப்படத்தை தாண்டி நடிகர் முரளியின் மகனான ஆகாஷ் முரளியுடன் `நேசிப்பாயா’ திரைப்படத்திலும் அதிதி நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கியிருக்கிறார். மேலும் அர்ஜூன் தாஸுடன் `ஒன்ஸ் மோர்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…