பழைய போனில் இருந்து புது போனுக்கு டேட்டாவை மாற்றுவது எப்படி? ஒரே Tap-ல் செய்யலாம்!

எவ்வளவு விலை கொடுத்து மொபைல் போன் வாங்கினாலும், இன்னொரு புது போன் வந்தால், பழைய போனை மறந்து விடுவோம். அந்த சமயத்தில், பழைய போனில் இருந்து புதிய மொபைலுக்கு டேட்டாவை மாற்ற நாம் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். அதற்கான டிப்ஸை, இங்கு பார்ப்போம்.

க்ளவுட் சர்விஸ்:

நம் மொபைல் போனில் இருக்கும் டேட்டாக்கள் பெரும்பாலானவை கூகுள் டிரைவ், ஐ க்ளவுட் உள்ளிட்ட க்ளவுட் செர்வீஸில் save ஆகியிருக்கும். வாட்ஸ் ஆப் உரையாடல்கள், போட்டோக்கள் ஆகியவற்றை இன்னொரு போனில் மாற்ற அந்த போனில் உங்கள் க்ளவுட் சர்வீஸ் அக்கவுண்டை லாக் இன் செய்யவும். இது, அந்த டேட்டாக்கள் அனைத்தும் புது போனில் சேவ் ஆக உதவும். 

டிரான்ஸ்ஃபர் ஆக்க ஆப்:

Google-Data Transfer Tool அல்லது Smart Switch app ஆகியவற்றை உங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து மொபைல் எண்கள், போட்டோகள் மற்றும் வீடியோக்களை ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். இது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் உபயோகமாகும். 

Apple IOS போன்களில் Move to iOS என்ற ஆப்ஷன் இருக்கிறது.

USB Cable:

இரண்டு மொபைல் போன்களையும் USB Cable-ல் கனெக்ட் செய்து டேட்டாக்களை மாற்றிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன், ஆப்பிள் ஐஓஎஸ் மொபைல்களுக்கு என தனித்தனியாக கேபிள்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். 

புளூட்டூத்:

புளூட்டூத் மூலம் பெரிய டேட்டாக்களை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, மொபைல் காண்டேக்ட், சிறிய Jpg வடிவில் இருக்கும் ஃபைல்களை மாற்றிக்கொள்ளலாம். 

கணினியை உபயோகிக்கலாம்:

உங்களிடம் இருக்கும் USB கேபிளை லேப்டாப் அல்லது கணினியில் கனெக்ட் செய்து, உங்கள் போனில் இருக்கும் போட்டோ, காண்டேக்ட், வீடியோ, பிற டேட்டாக்களை அதில் copy செய்து கொள்ளலாம். பின்னர் அதனை புது போனில் அதே USB Cable-ல் கனெக்ட் செய்து மாற்றிக்கொள்ளலாம். 

மெமரி கார்ட்:

புது போன், பழைய போன் இரண்டிலும் மைக்ரோ SD card சப்போர்ட் ஆனால், டேட்டாக்களை அதன் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். 

ஒரே டேப்பில் செய்வது எப்படி? 

அனைத்து டேட்டாக்களையும் ஒரு போனில் இருந்து இன்னொரு போனிற்கு மாற்ற “Nearby Share” என்ற ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் பல File-களை ஒரே டேப்பில், சில நிமிடங்களில் ஷேர் செய்து கொள்ளலாம். 

iPhone-களில் AirDrop ஆப்ஷன் இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் போன்களில் அனைத்து டேட்டாக்களையும் ஷேர் செய்து கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.