Google Warns About These 5 Recent Online Scams : சமீபத்திய ஆன்லைன் உலகில் எல்லா வேலைகளும் எளிதாக நடைபெற்று வருகிறது. அதை விட அதிகமாக மோசடிகளும் மிக எளிதாக நடைப்பெற்று வருகிறது. இது குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், ஏமாற்ற நினைப்பவர்கள் வெவ்வேறு வழிகளை கண்டுபிடித்து ஏமாற்றி வருகின்றனர். அப்படி, சமீபத்திய ஸ்கேம்கள் குறித்து கூகுள் அலர்ட் கொடுத்திருக்கிறது.
செலிப்ரிட்டிகள் போல ஏமாற்றுவது:
ஏமாற்று பேர் வழிகள் பலர், AI தொழில்நுட்பத்தை உபயோகித்து, டீப் ஃபேக் முறையால், ஒரு பிரபலமான நபர் போன்ற ப்ரொஃபைலை உருவாக்குகின்றனர். இதை வைத்து, தவறான கேம்பைன்கள், முதலீடுகளுக்கான விளம்பரங்கள், அங்கீகரிக்கப்படாத செயலிகளை ப்ரமோட் செய்தல் ஆகியவற்றை செய்கின்றனர். இந்த AI Technology-ஐ வைத்து, பாேட்டோ மட்டுமல்ல, வீடியோவும் உருவாக்கலாம். இது, பார்ப்பதற்கே மிகவும் யதார்த்தமாக இருப்பதால் பலர் இதை நம்பி பணத்தை இழக்கின்றனர்.
கிரிப்டோ முதலீடுகள்:
கிரிப்டோ கரன்சி என்பது இப்போது பெரிய டாப்பிக்காக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர், இது குறித்து தவறான விளம்பரங்களை பலருக்கு அனுப்பி, ஆசை வார்த்தைகளை அதில் இணைக்கின்றனர். இதனால், பலர் பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்த வகையான ஸ்கேம் செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்வர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இது போல வரும் மெசஜ்கள், குறைந்த முதலீடு அதிக லாபம் தரும் போன்ற வாசகங்களை இணைத்ததாக இருக்குமாம்.
பேஜ் க்ளோனிங்:
சமீபத்திய காலமாக, இந்த வகையான மோசடிகள்தான் அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நம்பகமான ஆப்பின் பெயரில் வெப்சைட்கள் உருவாக்கப்பட்டு, அதை தொடுபவர்களின் தகவல்களை திருடும் வேலையை செய்து வருகிறது. மேலும், இது போன்ற தெரியாத சைட்டில் மாட்டிக்கொண்டால், செல்போனில் நமக்கே தெரியாமல் தீங்கிழைக்கும் மென்பொருள் இன்ஸ்டால் ஆகி விடுமாம். இதை வைத்து, நிதி ரீதியிலான விஷயங்களையும் அவர்கள் திருட வாய்ப்புள்ளது.
தொடும் பக்கம் மூடுதல்:
மோசடி செய்பவர்கள், தாங்கள் மாட்டிக்கொள்வதை தவிர்க்கவும், தீங்கிழைக்கும் மென்பொருளை மறக்கவும் சில நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். இது, பயனாளர்களுக்கு கூகுள் அனுப்புவது போல ஒரு விளம்பரத்தை காண்பிக்கும், அதை தொடும் போது அந்த பேஜ் மூடுவது அல்லது லோட் ஆகாமல் இருப்பது போன்ற விஷயங்கள் ஏற்படும்.
பெரிய நிகழ்ச்சிகளை வைத்து ஏமாற்றுதல்:
சைபர் குற்றம் செய்பவர்கள் இயற்கை பேரழிவுகள், தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை பயன்படுத்தி மோசடிகளை செய்கின்றனர்.
உதாரணத்திற்கு, ஏப்ரல் மாதத்தில் நடந்த சூரிய கிரகணம் பல மோசடிகளுக்கு காரணமாக அமைந்தது. இப்படி ஸ்கேம் செய்பவர்கள், நாசாவுடன் இணைந்திருப்பதாக பொய்யாக கூறி பயணாளர்களை ஈர்க்கின்றனர்.
இயற்கை பேரழிவுகள் தொடர்பான மோசடிகள் ஆண்டு முழுவதும் வந்து கொண்டே இருக்கும். இது, உதவி செய்ய நினைக்கும் பலரை ஏமாற்றும் வகையில் இருக்கும் கூகுள் குறிப்பிட்டிருக்கிறது.