இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரரை தேடி வருகிறது பிசிசிஐ. இந்நிலையில், இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது ஷுப்மான் கில்லுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த காயம் எப்போது சரியாகும் என்று தெரியாததால் அணி நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது. இவரை தவிர சர்ஃபராஸ் கான், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி போன்றவீரர்களுக்கும் பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பெரிய அடி இல்லை என்றாலும், கேஎல் ராகுலுக்கு முழங்கையில் அடிபட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவரும் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா A அணியில் இருந்து சில வீரர்களை இந்திய அணியில் எடுக்க நிர்வாகம் யோசித்து வருகிறது.
With Gill and Rohit ruled out for Perth, here’s the XI I would go with:
Yashasvi, KL, Padikkal/Sai Sudharsan/Washington Sundar, Virat, Pant, Jurel, Jadeja, Harshit, Bumrah, Prasidh, Siraj.
If KL isn’t fit, I’d bring in Abhimanyu.#INDvsAUS #BGT2025
— Shaileshwar Sharma (@TheCricketChap) November 16, 2024
இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவரை இருக்க வைக்க பிசிசிஐ திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலது கை பேட்ஸ்மேன்களை விட, இடது கை பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா Aக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடி இருந்தனர். சாய் சுதர்சன் 103 ரன்களும், படிக்கல் 88 ரன்களும் அடித்து உள்ளனர். இதனால் அணி நிர்வாகம் இவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
“இந்தியா A அணியில் இருந்து யாரை எடுப்பது என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவு. ரோஹித் சர்மாவிற்கு பதில் ஒரு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் அதனை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு படிக்கல் ரஞ்சி டிராபி போட்டியிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது படிக்கல் அறிமுகமானார். மறுபுறம் சுதர்சன் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.