சூர்யா நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா படத்துக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் சூர்யாவின் மனைவியாக இல்லாமல் ஒரு சினிமா விரும்பியாகவே இந்த பதிவை எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகாவின் பதிவு:
“கங்குவா – ஒரு அபூர்வ சினிமா
ஒரு நடிகராகவும் சினிமாவை முன்னெடுத்துச் செல்ல, உங்களது துணிச்சலான கனவுகளுக்காகவும் உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன் சூர்யா.
நிச்சயமாக முதல் அரைமணிநேரம் சரியாக வரவில்லை. ஒரே சலசலப்பாக இருந்தது. பெரும்பாலான இந்திய சினிமாக்களில் குறைகள் இருக்கின்றன. இத்தனை பெரிய அளவில் சோதனை முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகியிருப்பதால் குறைகள் இருப்பது நியாயமானதே. அதுவும் மொத்த 3 மணி நேர படத்தில் முதல் அரை மணிநேரம் மட்டுமே.
உண்மையில் இது ஒரு சிறந்த சினிமா அனுபவம். இந்த கேரமா வேலைப்பாடும், செயல்படுத்துதலும் இதுவரை தமிழ் சினிமா காணாதது சினிமட்டோகிராபர் வெற்றி பழனிசாமி (சல்யூட்).
மீடியாக்களிலிருந்தும் சில குழுக்களிலிருந்தும் நெகடிவ் விமர்சனங்கள் வருவது அதிர்ச்சியாக இருந்தது.
பெரிய பட்ஜெட்டில் உருவான, அறிவுசாராத, நான் பார்த்த பழைய கதைகளுடன், ஹீரோயினியை துரத்தும் காட்சிகளுடன், இரட்டை அர்த்த வசனங்களுடன், டாப் 10 சண்டை காட்சிகளுடன் வந்த படங்களுக்கு கூட இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரவில்லை.
கங்குவாவின் பாசிடிவ் பக்கங்கள் குறித்து என்ன நிலைப்பாடு? இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சியும், கங்குவாவுக்கும் சிறுவனுக்குமான அன்பும் துரோகமும்… ரிவியூ செய்யும்போது நல்லவற்றை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.
இவற்றையெல்லாம் (ரிவியூக்களை) படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா, நம்ப வேண்டுமா என பெரிய அளவில் சிந்திக்க வைக்கிறது.
முதல்நாளே கங்குவாவுக்கு நெகட்டிவிட்டியைத் தேர்வு செய்தது வருத்தத்துக்குரியது, அதுவும் படத்தின் முதல்காட்சி முடிவதற்குள்ளேயே (பல குழு பிரசாரங்கள் போல் தோன்றியது). உண்மையில் 3 டியை உருவாக்க படக்குழு மேற்கொண்ட முயற்சிகள், படத்தின் கரு மற்றும் அற்புதமான காட்சிகளுக்காக படத்துக்கு பாராட்டு கிடைத்திருக்க வேண்டும்.
கங்குவா படக்குழு பெருமையோடிருக்க வேண்டும். எதிர்மறை கருத்துகள் தெரிவிப்பவர்கள், சினிமாவை உயர்த்துவதற்கு எதுவும் செய்வதில்லை”.என்று பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…