புதுடெல்லி: கடைசியாக நைஜீரியாவுக்கு கடந்த அக்டோபர் 2007இல், அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் இந்தியப் பிரதமராகி உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவை ‘உத்திசார் கூட்டாளித்துவம்’ என்ற நிலைக்கு உயர்த்தின. நமது தூரகரக ரீதியான உறவுகள் ‘வரலாற்று நட்பில்’ இருந்து ‘உத்திசார் கூட்டாளித்துவத்துக்கு’ மாறியுள்ளன. 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்டதாக இந்தியாவும், 220 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நாடாக நைஜீரியாவும் உள்ளன. இவை இரண்டுமே, பல மதங்களையும், பல இனங்களையும் மற்றும் பல மொழிகளையும் சார்ந்த சமூகங்களைக் கொண்ட பெரிய வளரும் ஜனநாயக நாடுகளாகும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஜனநாயக நாடான நைஜீரியாவும் இயற்கையான கூட்டாளிகளாக மாறியுள்ளன. கடந்த 1960-ல் சுதந்திரம் அடைந்த நாடு நைஜீரியா. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, நவம்பர் 1958-ல் இந்தியா தனது தூதரக இல்லத்தை அந்நாட்டின் லாகோஸில் நிறுவியது. இதனுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுசார் தொடர்புகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
60-கள் முதல் 80-கள் வரை இந்திய ஆசிரியர்களும் மருத்துவர்களும் நைஜீரியாவின் தொடக்க ஆண்டுகளில் முக்கியமான பங்காற்றினர். இந்திய ராணுவ அதிகாரிகளால் கடுனா, நேவல் வார் காலேஜ், போர்ட் ஹார்கோர்ட் ஆகியவற்றில் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியை நிறுவப்பட்டன. இதன்மூலம், பாதுகாப்பு பயிற்சிக்கும் இந்த முயற்சி நீட்டிக்கப்பட்டது. இன்று நாற்பது முதல் அறுபதுகளில் உள்ள ஒரு தலைமுறை நைஜீரியர்கள் இந்திய ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், நைஜீரியர்கள் இந்திய மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்கள். நைஜீரியர்களைப் பொருத்தவரை கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இந்தியாவே விரும்பத்தக்க இடமாக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் மிகப் பெரிய சமூகமாக சுமார் 60,000 பேர் கொண்டவர்களாக இந்திய சமூகம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவின் முக்கியத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கிறது. அனைத்து முக்கியமான உற்பத்தித் துறைகளிலும் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்த 200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் உள்ளன, மேலும் இந்த நிறுவனங்கள் கூட்டாட்சி அரசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய முதலாளிகளாக உள்ளன.
சலுகைக் கடன்கள் (100 மில்லியன் டாலர்) மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை வழங்குவதன் மூலமும் வளர்ச்சி உதவிகளை வழங்குவதன் மூலமும் நைஜீரியாவின் வளர்ச்சிக் கூட்டாளியாக இந்தியா இரண்டு துறைகளிலும் முன்னணியில் உள்ளது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐடிஇசி) திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்பில் நைஜீரியாவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நைஜீரியாவுக்கு ஐடிஇசியின் கீழ் சுமார் 250 குடிமக்களை வழங்கிறது.
இத்துடன், 250 பாதுகாப்புப் பயிற்சி இடங்களையும் நைஜீரியாவிற்கு இந்தியா வழங்குகிறது. ஐடிஇசி வழியாக 1970 முதல் இதுவரை 27500 நைஜீரியர்கள் பலனடைந்திருக்கின்றனர். இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு, ICCR, CV ராமன் ஹிந்தி கல்வி உதவித்தொகை, e-வித்யா பாரதி மற்றும் e-ஆரோக்கிய பாரதி (eVBAB) போன்றவற்றின் கீழ் நைஜீரிய மாணவர்களுக்கு பல்வேறு பிற உதவித்தொகைகளும் அளிக்கப்படுகின்றன.