வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி சமீபத்தில் இளையராஜா இசையில் உருவான ‘தினம் தினமும்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அப்றோம்; இப்பவும் அவர்தா ராஜா” என்று இளையராஜாவின் இசை குறித்து பாராட்டி சமூகவலைதளங்களில் பாடலை வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் பேட்டியளித்திருக்கும் நடிகர் சூரி, ‘விடுதலை பாகம் 2’ குறித்தும் ‘கங்குவா’ பட நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் சூரி. மேலும், தனது அடுத்தடுத்தத் திரைப்படங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் நடிகர் சூரி, “வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது விடுதலை 2 பாகம். ‘தினம் தினமும்’ பாடலுக்கு நல்ல வரவேற்பு. உலகின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இந்த 83 வயதிலும் காலையில் எழுந்து, தியானம் செய்து இசையை எழுதி இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும், அவர் நமக்கு இன்னும் நிறையப் பாடல்களைக் கொடுக்க வேண்டும்.
அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். ‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். அடுத்து, ‘விடுதலை’ பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் சார் பங்களிப்பில் திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறேன். அதற்கான இயக்குநர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வரும்.” என்றார்.
‘கங்குவா’ திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சங்கள் குறித்து பேசிய சூரி, “‘கங்குவா’ திரைப்படம் நல்ல இருக்கும். நாங்கள் குடும்பத்துடன் படம் பார்த்தோம். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டப்படம். கடின உழைப்பைப் போட்டிருக்கிறார்கள். அதற்காக நாம் அப்படக்குழுவிற்கு மரியாதையளிக்க வேண்டும். படத்தைப் பார்த்த நிறையபேர் நேர்மையான விமர்சனம் கூறிவருகின்றனர். பலர் நல்லா இருப்பதாகக் கூறி ஆதரவு தருகின்றனர். ஆனால், சிலர் படத்தைப் பார்த்தும், பார்க்காமலே நெகட்டிவான விமர்சனங்களைத் தருகின்றனர். வாரம் வாரம் நாம் கவனிக்கபட வேண்டும், வைரலாக வேண்டும் என கேமரா முன் வந்து நெகட்டிவாக பேசுகிறார்கள். நெகட்டிவாகப் பேசினால் பிரபலமாகலாம் என்று நினைக்கிறார்கள். அதுமிகவும் தவறான விஷயம்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…