புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிந்துள்ளன. இக்கால கட்டத் தில் சுயேச்சையான மதுகோடா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பாஜக.வின் அர்ஜுன் முண்டா. ஜேவிஎம் கட்சியின் சிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் 3 முறை முதல்வராக பதவி வகித்தனர் கடந்த 2014 தேர்தலுக்கு பின் பாஜக.வின் ரகுபர்தாஸ் மட்டுமே 5 வருடம் முதல்வராக இருந் தார். இவர் தற்போது ஒடிசா ஆளுநராக உள்ளார். முதல் வர் ஹேமந்த் சோரன் சிறை யில் இருந்த போது, இடைக்கால முதல்வராக சம்பய் சோரன் இருந்தார்.
இதற்கிடையில், இங்கு குடிய ரசு தலைவர் ஆட்சி 3 3 முறை அமல் படுத்தப்பட்டன. இதனால், எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் நிலையான ஆட்சி ஜார்க் கண்டில் அமையவில்லை. கடந் த 24 ஆண்டுகளாக 4 சட்டப்பேர வை தேர்தலை சந்தித்த ஜார்க் கண்டில் ஒரு முதல்வரும் முழு மையாக 5 ஆண்டு கால ஆட் சியை நிறைவு செய்யவில்லை. ஜார்க்கண்டின் மொத்த தொகுதிகள் 81. இங்கு தனி மெஜாரிட்டி ஆட்சிக்கு 41 எம்எல் ஏ.க்கள் தேவை. ஆனால், இது வரை எந்த ஒரு அரசியல் கட் சியும் 41 எம்எல்ஏ.க்களின் பலத் தை பெறவில்லை. கடைசியாக கடந்த 2014 சட்டப்பேரவை தேர் தல் மட்டும் அதிகபட்சமாக 37 தொகுதிகளை பாஜக பெற்றது.
ஜார்க்கண்ட் வரலாற்றில் இந்த வெற்றி பெரும் சாதனையாக அமைந்தாலும் பாஜக.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கடந்த 2005 தேர்தலில் பாஜக, வுக்கு 30 கிடைத்தன. கடந்த 2020 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேவிஎம்) 30 தொகு திகளில் வென்றது. இதுபோல் எந்தத் தேர்தலிலும் ஒரு கட்சி பெரும்பான்மை பெறவில்லை. அரசியல் கட்சிகளுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததற்கு. ஜார்க்கண்டில் தனி நபர் செல் வாக்கு காரணமாக உள்ளது.
சுயேச்சை எம்எல்ஏ.க்களும் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங் கு பெற்று விடுகின்றனர். அது போன்ற ஒரு சூழ்நிலையால் தான் சுயேச்சை எம்எல்ஏ.வாக இருந்த மதுகோடாவும் ஒரு முறை முதல்வரானார். இந்நிலையில், தற்போது நடைபெறும் 5-வது தேர்தலில் கடந்த கால முடிவுகளின் அடிப் படையில் இரு பெரும் கூட்டணி கள் அமைந்துள்ளன. இவற்றில் ஆளும் கட்சியான ஜேவிஎம். காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி களுடன் ஒரு கூட்டணி அமைந் துள்ளது. மற்றொரு கூட்டணி யாக முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, அகில இந்திய மாணவர் சங்கம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சரான சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி இடம் பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த மாநிலத்தில் எந்தக் கட்சியா வது தனிப்பெரும்பான்மை பெறு கிறதா அல்லது மீண்டும் கூட் டணி ஆட்சிதானா என்பது அன்று மாலைக்குள் தெரியவரும்.