Reliance Jio Prepaid Plan: கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்தின. இதன் காரணமாக மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் பக்கம் சாயத் தொடங்கினர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சில புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நாடு முழுவதும் பரவலாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தகுதியான சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரம்பற்ற 5ஜி டேட்டாவை அனுபவிக்க விரும்பினால், 4ஜி பயனர்கள் குறைந்தபட்சம் 2ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் திட்டங்களை பெறும் வகையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், மலிவான விலையில் வரம்பற்ற 5G டேட்டா வழங்கும் சிறந்த திட்டத்தைப் பற்றிய அறிந்து கொள்ளலாம்.
வரம்பற்ற 5ஜி டேட்டா
இணைய வசதியை பொறுத்தவரை, 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட தினசரி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்த தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த பலனைப் பெற பயனர்கள் 5G ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தின் 5G சேவைகள் கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்களிடன் இருந்தால் இருந்தால், தினசரி டேட்டாவைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணையம் அல்லது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தலாம்.
ஜியோவின் மலிவான வரம்பற்ற 5G திட்டம்
ஜியோ சந்தாதாரர்களுக்கான மலிவான வரம்பற்ற 5G திட்டம் ரூ.349 ஆகும். இந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், 4G சந்தாதாரர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 2GB தினசரி டேட்டாவின் பலன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், தகுதியான சந்தாதாரர்கள் வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுவார்கள். இது தவிர, பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம் மேலும் இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.349 திட்டத்தில் கிடைக்கும் பிற நன்மைகள்
ரூ.349 திட்டம் 4G பயனர்களுக்கு மொத்தம் 56GB டேட்டாவை வழங்குகிறது. ஆனால் 5G பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் டேட்டாவைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் Jio பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது, அதன் பட்டியலில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்றவை அடங்கும். பல திட்டங்கள் வரம்பற்ற டேட்டாவை வழங்கினாலும், குறைந்த விலையில் வரம்பற்ற 5G டேட்டாவின் பலனை அனுபவிக்க விரும்பினால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது சிறந்தது.