‘குற்றம் நிரூபிக்கப்படாமல் ஜெயிலில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைக்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமல் பலர் சிறையில் இருந்து வருகிறார்கள். அப்படி சிறையில் இருப்பவர்கள் அதாவது ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கும் தண்டனையில் மூன்றில் ஒரு பங்கு கால தண்டனை அனுபவித்து இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் நீதி கிடைத்துவிடும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது என அமித்ஷா குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
குறிப்பிட்ட கால அளவில் இது சம்பந்தமான 60 பிரிவுகளில் பணிகளை முடிக்க நீதிமன்றம், வழக்குறைஞர்கள் மற்றும் போலீசாருக்கு கூறியிருக்கிறோம். மேலும், கடுமை அல்லாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயில் சம்பந்தமான பணிகளை சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றும் பேசியிருக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு சட்டம் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…