நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னுதாரணமாக சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால், மக்களும் சட்டத்தை மதிப்பார்கள் என்றும் நீதி அமைச்சரின் கடமை வழக்கு விசாரிப்பது, அதற்காக செயல்படுதல் அன்றி அவசியமான வசதிகளை வழங்குவதே என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
நீதி அமைச்சர் தனது கடமைகளை உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கும் வைபவத்தின் போது இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடொன்றில் பொருளாதார சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக சட்டத்தின் ஆட்சி அவசியம் என்றும் நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நீதிப் பொறிமுறையில் அரசியல் மயமாக்கம் இடம்பெற்றதாக சமூகத்தில் எண்ணம் காணப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், நீதிக் கட்டமைப்பு தொடர்பாக பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமென்றும் வலியுறுத்தினார்.
மக்களின் நம்பிக்கையை வெற்றி பெற்ற நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் சேவை என்பவற்றை நிறுவ வேண்டும் என்றும், அவ்வாறான சட்டங்கள் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சருக்கும், அரசியல்வாதிகளுக்கும் கடமை என்பதுடன் அவர்களின் அதிகாரத்திற்கு வரையறை காணப்படுவதுடன் அவை சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் விவரித்தார்.
புதிய சட்டங்கள் எதுவும் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை என்றும், அவசியமான தரப்பினருடன் கலந்துரையாடி அதன் பின்னர் அச்சட்டங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.