IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இந்த பாஸ்ட் பௌலர்… பலம் பெறும் இந்திய அணி!

India vs Australia Perth Test: பார்டர் – கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடருக்கு இந்திய அணி (Team India) தற்போது கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நாளை மறுதினம் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதே பெர்த் நகரில் உள்ள WACA மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

ரோஹித் சர்மா (Rohit Sharma) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்பதால் முன்னரே ஓப்பனருக்கு பேக்-அப்பாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் கேஎல் ராகுல் அந்த இடத்திற்கு நகர்ந்துள்ளார். சுப்மான் கில்லுக்கும் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவரும் முதல் போட்டியில் விளையாட மாட்டார்.

காயமும்… வாய்ப்பும்…

அந்த இடத்திற்கு தற்போது தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் மிடில் ஆர்டரில் ஏற்படும் வெற்றிடத்தை சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை கொண்டு நிரப்ப வேண்டிய சூழலுக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல் டெஸ்டில் ஒரு ஸ்பின்னரை விளையாட வைக்கவே இந்தியா திட்டமிடும் என்பதால், மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும்.

ஷமியும் இல்லாத நிலையில், பும்ரா – சிராஜ் – ஆகாஷ் தீப் ஆகியோரே பிளேயிங் லெவனில் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஹர்ஷித் ராணா – பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் சிராஜிற்கு பதில் விளையாடலாம். இந்த 18 வீரர்களை தாண்டி முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் டிராவலிங் ரிசர்வ்ஸ் ஆக சேர்க்கப்பட்டனர். அதாவது பிரதான அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இவர்கள் அவர்களின் இடத்தை நிரப்புவார்கள். 

ஆஸ்திரேலியா பறக்கும் யாஷ் தயாள்

இந்நிலையில், தற்போது பயிற்சியின்போது கலீல் அகமதிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது இடத்திற்கு இந்திய அணி யாஷ் தயாளை (Yash Dhayal) இந்தியாவில் இருந்து வரவழைத்துள்ளது. டெஸ்ட் அணிக்கு முதல் ஆப்ஷனாக யாஷ் தயாள் இருந்தாலும் அவரை தென்னாப்பிரிக்க டி20 தொடருக்காக இந்தியா அனுப்பியிருந்தது. 

இன்னும் அவர் ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத நிலையில் தற்போது டிராவிலிங் ரிசர்வ் ஆக சேர்க்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த ஸ்குவாடில் இந்தியா ஒரே ஒரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரையே வைத்திருக்கிறது. அதில் கலீல் அகமதிற்கு காயம் ஏற்பட்டதால், யாஷ் தயாளை தற்போகு கொண்டுவந்துள்ளது. யாஷ் தயாள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.