புதுடெல்லி,
மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக இன்று 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தநிலையில் மராட்டியம், ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் இரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
288 இடங்களை கொண்ட மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்படுகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை.
மராட்டியம் கருத்து கணிப்புகள்:-
* பாஜக கூட்டணி 137-157, காங்கிரஸ் கூட்டணி 126-146 மற்றவை 2-8 ரிப்பப்ளிக் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 147, காங்கிரஸ் கூட்டணி 136, மற்றவை 5 இடங்கள் பெறும் – சி.என்.என் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 137 -157, காங்கிரஸ் கூட்டணி 126-146, மற்றவை 2-8 பி-மார்க் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 150 -170, காங்கிரஸ் கூட்டணி 110 -130, மற்றவை 8-10 இடங்கள் – ஏபிபி மெட்ரிஸ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி :152-150காங்கிரஸ் கூட்டணி :130-138மற்ற கட்சிகள்: 6-8 நியூஸ் 24 – டுடேஸ் சாணக்யா
* பாஜக கூட்டணி : 150 -170காங்கிரஸ் கூட்டணி: 110-130மற்ற கட்சிகள்: 8-10ஏபிபி -மெட்ரைஸ் நிறுவனம்
* பாஜக கூட்டணி : 154 காங்கிரஸ் கூட்டணி : 128 மற்ற கட்சிகள்: 6 நியூஸ் 18 டிவி
* பீப்பிள் பிளஸ் கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களையும், மற்றவை 7 முதல் 12 இடங்களையும் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் பாஜக கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் 95, சரத் பவார் 86 தொகுதிகளில் போட்டியிட்டது.
81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், ‘ காங்கிரஸ்’கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஜார்கண்ட் கருத்து கணிப்புகள்:–
* பாஜக கூட்டணி 45, காங்கிரஸ் கூட்டணி 33, மற்றவை 3 இடங்கள்: சி.என்.என் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 42 – 47, காங்கிரஸ் கூட்டணி 25-30, இதர 1-4 இடங்களை பெறலாம்: ஏபிபி மெட்ரிஸ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 44-53, காங்கிரஸ் கூட்டணி 25-37, மற்றவை 5-9: பீப்பிள் பல்ஸ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி 40-44, காங்கிரஸ் கூட்டணி 30-40, மற்றவை 1-1 : டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்
* பாஜக கூட்டணி: 47 காங்கிரஸ் கூட்டணி : 30 மற்ற கட்சிகள்: 4 – நியூஸ் 18
* பாஜக கூட்டணி :25 காங்கிரஸ் கூட்டணி:53 மற்ற கட்சிகள்:3 – ஆக்சிஸ் மை இந்தியா
* பாஜக கூட்டணி:42-47 காங்கிரஸ் கூட்டணி: 25-30 மற்ற கட்சிகள்:1-4 -மெட்டரைஸ்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.