சத்தீஸ்கர் மசூதிகளில் சொற்பொழிவுக்கு அனுமதி அவசியம்: வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: சத்​தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழு​வ​தி​லும் உள்ள மசூதி​களில் வெள்​ளிக்​கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்​கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்​தவல்​லிகள் இஸ்லாமிய சொற்​பொழிவு ஆற்று​வார்​கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறி​யுள்ளது பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தர​வில், “மசூ​தி​களில் தொழுகைக்கு பின் சொற்​பொழி​வாற்ற இனி வக்பு வாரி​யத்​தின் அனுமதி அவசி​யம். மீறு​பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்​கப்​படும். சொற்​பொழி​வு​களின் போது சில கருத்துகள் கோபமூட்டும் வகையில் உள்ளதாக கூறப்படு​கிறது. இதனால் பொது​மக்கள் மத்தி​யில் தவறான கருத்து மற்றும் மதக்​கல​வர​மும் உருவாகும் என்று அஞ்சப்​படு​கிறது. இதைவிடுத்து சிறு​பான்​மை​யினருக்கான அரசு திட்​டங்கள் பற்றி எடுத்துரைக்​கலாம். எனவே, மசூதிகள் மற்றும் தர்காக்​களில் எல்லை மீறுவதை வக்பு வாரியம் விரும்ப
வில்லை” என்று தெரி​வித்து உள்ளார்.

இந்த உத்தரவை நாட்​டின் அனைத்து மாநில மசூதி​களி​லும் அமலாக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சலீம் ராஜ் கடிதம் எழுதி​யுள்​ளார். மசூதி​களில் நடைபெறும் சொற்​பொழி​வு​களில் அரசியல் பேசுவதாக புகார் எழுந்​த​தால் இந்த உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்ளதாக தெரி​கிறது. தேர்தல் நேரங்​களில் இந்த சொற்​பொழி​வு​களின் போது எந்த கட்சிக்கு வாக்​களிக்க வேண்​டும் என்றும் இமாம்கள் அறிவுறுத்து​வதாக கூறப்​படு​கிறது.

இந்த உத்தர​வுக்கு முஸ்​லிம்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்​தீன் ஒவைசி எம்.பி.​யும் சத்தீஸ்கர் பாஜக அரசை விமர்​சித்துள்ளார். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ்​நாடு வக்பு வாரியத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்​லிம் லீக் எம்.பி.​ யுமான கே.நவாஸ்கனி கூறும்​போது, “இது​போன்று உத்தரவிட எந்த வக்பு வாரி​யத்​துக்​கும் உரிமை இல்லை. அந்தந்த மாநிலத்​தில் உள்ள சொத்துகளை பராமரிப்பதே வக்பு வாரி​யத்​தின் பணியாகும். பாஜக.வுக்கு ஆதரவாக சலீம் ராஜ் செயல்​படுவது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது. குர் ஆனின் அடிப்​படை​யில் வெள்​ளிக்​கிழமை சொற்​பொழி​வு​களுக்கு எவரிட​மும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

சத்தீஸ்கர் வக்பு வாரியத் தலைவராக நீதிபதி மின்​ஹாசூத்​தீன் இருந்​தார். நேர்​மை​யானவ​ராகக் கருதப்​பட்​ட இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்​மானம் ​கொண்டு வரப்​பட்டு கடந்த ​மாதம் பதவி இறக்​கப்​பட்​டார். பு​திய தலை​வராக டாக்​டர் சலீம் ராஜ் என்​பவரை பாஜக ஆளும் அரசு நியமித்தது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.