சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் நேர்காணல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். அந்தவகையில் ‘கோட்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
“கோட் படத்தில் ஒரு கேமியோ இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார். படப்பிடிப்பு நடக்க துவங்கியபோதே அதை சொல்லியிருந்தார். ஆனால் என்ன சீன் என்றெல்லாம் சொல்லவில்லை. இருவருக்கும் இருக்கும் காட்சிக்கான பேப்பரைப் பார்த்து விஜய் சாரும் மகிழ்ந்திருக்கிறார். கடைசியாக, ஷூட்டிற்கு முந்தய நாள்தான் வெங்கட் பிரபு சீன் பேப்பரை அனுப்பினார்.
அன்றைய தினம் காலையில் ஷூட்டிங் சென்றபோது, ’துப்பாக்கியை கொடுத்து வில்லன் மேனனை பார்த்துக்கோங்க. சுடக்கூடாது’ என்பதுதான் சீன் பேப்பரில் இருந்தது. ஆனால், விஜய் சார்தான் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வசனத்தை சேர்த்துப் பேசினார். அது அவரது பெருந்தன்மை. சிலர் சினிமா பொறுப்பை ஒப்படைத்துவிட்டதாக பேசுகின்றனர். நான் அப்படி பார்க்கவில்லை.
அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன். விஜய் அவார்ட்ஸில் அவரிடம் இருந்தே ஒருமுறை நான் விருது வாங்கினேன். கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருடன் ஸ்கிரீன் ஷேர் செய்தேன். இது இரண்டையுமே அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன்” என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…