இயக்குநர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படம் வெளியானது. அப்போது தொடங்கிய அஜித் – ஷாலினி காதல் இன்றளவும் 90’ஸ் கிட்ஸ் பொறாமைபடும் வகையில் தொடர்ந்து வருகிறது. 2000-வருடத்துடன் திரைத்துறைக்கு குட் பை சொன்ன ஷாலினி, வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் வலம் வருகிறார்கள். இவர்களின் காதல் சாட்சியாக அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஷாலினியின் தனது 44-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டில் இருக்கும் நடிகர் அஜித்தால் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரம், ஷாலினி தன் தங்கை, தமையன், மகன், மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில்தான், நடிகர் அஜித் குமார், தன் காதல் மனைவிக்கு சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்று அளித்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் லெக்சஸ் எனும் விலை உயர்ந்த காருக்கு முன்னால் நடிகை ஷாலினி நின்றுக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…