“சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் யூத வெறுப்பின் விளைவு” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டெல் அவிவ்: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அவர் மட்டுமல்லாது இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த பிடிவாரன்ட் குறித்து நெதன்யாகு எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில், “யூத வெறுப்புடன் எடுக்கப்பட்ட முடிவு. நவீன ட்ரேஃபஸ் விசாரணைக்கு சமமானது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

யார் இந்த ட்ரேஃபஸ்? – 1894 – 1906 இடையேயான காலகட்டத்தில் பிரான்ஸில் உளவு பார்த்ததாக யூத ராணுவ அதிகாரியான ஆல்ஃப்ரெட் ட்ரேஃபஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் ஜெர்மனுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என உறுதியாகி அவர் பிரஞ்சு ராணுவத்தில் மீண்டும் சேக்கப்பட்டார். இவருடன் தான் இப்போது நெதன்யாகு தன்னை ஒப்பிட்டுள்ளார். ட்ரேஃபஸ் மீதான போலி குற்றச்சாட்டுகள் போன்றது தன் மீதான போர்க்குற்ற புகார்கள் என்று நெதன்யாகு கூறியுள்ளார். மேலும் தன்னை நவீன கால ட்ரேஃபஸ் எனக் கூறும் நெதன்யாகு தன் மீதான குற்றச்சாட்டும் போலியானது என்பது நிரூபணமாகும் எனக் கூறியுள்ளார்.

44,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் உள்பட சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல் ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.